சொந்த வீட்டிலேயே நகை திருடிய "பலே" 10ம் வகுப்பு மாணவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தன் சொந்த வீட்டிலேயே நகைகளைத் திருடி உத்தர பிரதேசத்திற்கு தப்பமுயன்ற 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை போலீஸார் கைது செய்தனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் திருவேந்திரநாத் குமார். இவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒருபுகார் கொடுத்தார். அதில், தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக்காணவில்லை என்று கூறியிருந்தார்.போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தான் திருடன் வீட்டுக்குள்ளேயே இருப்பது தெரியவந்தது.

திருவேந்திரநாத் குமாரின் மகன் ரஜத்தைக் காணவில்லை என்பதை அறிந்த போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டனர். அப்போது ரஜத் சில நாட்களுக்கு முன் புது பைக் வாங்கியதும், அதற்கான மீதப் பணத்தைநிறுவனத்திடம் கொடுக்கப் போவதும் போலீஸாருக்குத் தெரிய வந்தது.

போலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சென்ற போது, ரஜத் மீதப் பணத்தைக் கொடுத்து விட்டு உத்தரப்பிரதேசத்திற்கு போவதாக கூறிச் சென்றது தெரிந்தது.

போலீஸார் உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு ரயிலில் ஏற முயன்ற ரஜத்தைஅவர்கள் வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவரிடம் இருந்த சூட்கேஸில் ரூ.11.50 லட்ம் பெறுமானமுள்ள நகைகளும், ரூ.50,000 ரொக்கப் பணமும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்ட போலீசார் ரஜத்தைக் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+