சுருளி மலை: வனத்துறை அலட்சியத்தால் உயிரிழந்த யானைக் குட்டி
சுருளி மலை:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சுருளி மலையில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு குட்டி யானை பரிதாபமாக இறந்தது.
சுருளி மலையில், சுருளித் தீர்த்த நீர்வீழ்ச்சி அருகே விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒரு குட்டி யானை காயமடைந்தநிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
கவனிப்பாரற்றுக் கிடந்த அந்த யானை குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள்கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு வனத்துறையினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும்காட்டுக்குள் விட்டனர். அதன் பிறகு அந்த குட்டி யானையைக் காணவில்லை.
இந்த நிலையில் காட்டுக்குள் இறந்த நிலையில் அந்தக் குட்டி யானை கிடந்தது தெரிய வந்துள்ளது.
சரியான சிகிச்சை கிடைக்காத காரணத்தாலும், வயிற்றுக் கோளாறு காரணமாகவும் அந்த யானை இறந்திருக்கலாம்என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications