பணத்தைத் திருப்பிக் கேட்டவர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியவரிடம் பணம் கேட்டவர் பயங்கரமாக கொலைசெய்யப்பட்டு நடுரோட்டில் வீசப்பட்டார். விருத்தாசலத்தில் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்தது.

விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம்வாங்கியுள்ளார். ஆனால் யாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை.

இந்த நிலையில் அவரிடம் மகேஷ் என்பவரும் பணம் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல்,பணத்தையும் திருப்பித் தராத காரணத்தால், தன்னைப் போலவே பணம் கொடுத்த சிலரையும் அழைத்துக் கொண்டுமதியழகனிடம் சென்றார் மகேஷ்.

மதியழகனிடம் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஷைத் தவிரமற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

ஆனால் மகேஷ் மட்டும் பிடிவாதமாக அங்கேயே இருக்கவே, மதியழகன் மற்றும் அவரது கூட்டாளிகள்கோபமடைந்து, மகேஷை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் பிணத்தைநடுரோட்டில் போட்டு விட்டு தப்பினர்.

இந்த பயங்கர கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகி விட்ட மகேஷ்மற்றும் கூட்டாளிகளுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+