கடலூரில் மாணவிகளை மிரட்டி ஆபாசப் படம் எடுத்த 8 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூரில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்து விற்று வந்ததாகபோலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் ஏழை இளம் பெண்கள் ஆகியோரை மிரட்டிஆபாசப் படம் எடுத்து வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் படை கடலூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியது. அப்போதுஇன்டர்நெட் மையம் நடத்தி வரும் நபர் உள்பட 8 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து இதுவரை நடந்த விசாரணையின்மூலம் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணவிகளை மயக்கி, ஏமாற்றி அவர்களுக்கு பணம் தருவதாக ஆசை காட்டி ஆபாசப் படம் எடுத்து வந்துள்ளதுஇக்கும்பல். பிறகு அந்த ஆபாசப் படங்களை காட்டி மிரட்டியே, மீண்டும் மீண்டும் ஆபாசப்படங்களை எடுத்துவந்துள்ளது.

அதுபோலவே வேலைக்குச் செல்லும் வசதியற்ற, ஏழை இளம் பெண்களை தேர்வு செய்து அவர்களையும் இதேபாணியில் ஆபாசப் படம் எடுத்துள்ளதாதக் தெரிகிறது.

போலீஸ் விசாரணையின் இறுதியில் தான் இந்த பெரும் சம்பவத்தின் முழு விவரமும் தெரிய வரும். அப்படிவந்தால், சென்னையில் டாக்டர் பிரகாஷ் நடத்திய காமக் கேளிக்கைகளை விட இது மிக பயங்கரமாக இருக்கும்என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+