அணு ஆயுத மிரட்டல் வேண்டாம்: முஷாரப்புக்கு வாஜ்பாய் சூடு
ஐக்கிய நாடுகள் (நியூயார்க்):
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிக் கொண்டு தீவிரவாதத்தைத் தூண்டி வருவதாக ஐக்கிய நாடுகள்சபையில் பிரதமர் வாஜ்பாய் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் தன்னுடைய ஐ.நா. உரையின் போது இந்தியாவைக்கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
அதற்கு வாஜ்பாய் தக்க பதிலடி கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தது போலவே முஷாரப்புக்கு அவர்நன்றாக சூடு கொடுத்துள்ளார். ஐ.நா. சபையில் வாஜ்பாயின் உரை:
அணு ஆயுதங்களைத் தாங்களும் வைத்துள்ளோம் என்று மிரட்டிக் கொண்டே காஷ்மீரில் பாகிஸ்தான்பயங்கரவாதத்தைத் தூண்டி வருகிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருகிறோம் என்று கூறிக்கொண்டு அங்குள்ள அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் இந்தப் பயங்கரவாதச் செயல்களை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.
எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முஷாரப் அழைப்புவிடுத்துள்ளார். எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை என்றபேச்சுக்கே இடமில்லை.
இந்துத்துவத் தீவிரவாதிகள் காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதாகவும் முஷாரப் கூறியுள்ளார்.சுயலாபத்துக்காகவும் உலக நாடுகளின் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவுமே அவர் அவ்வாறுகூறியுள்ளார்.
காஷ்மீர் தேர்தலை தில்லுமுல்லு என்றும் கண்துடைப்பு என்றும் கூறும் முஷாரப், ஐ.எஸ்.ஐயிடம் பயிற்சி பெற்றதீவிரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பி அப்பாவி மக்களையும் அரசியல்வாதிகளையும் கொல்வது ஏன்?
இந்தியா மீது பயங்கரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தான், சர்வதேச பயங்கரவாதத்தை ஒளித்துக் கட்டுவோம்என்று உலக நாடுகளுடன் சேர்ந்து கொண்டு மார்தட்டிக் கொள்வது வேடிக்கையாகத் தான் உள்ளது.
இந்திய மக்கள் போரை எப்போதுமே விரும்பவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். மற்ற நாடுகளின் எல்லையைக் கைப்பற்ற வேண்டும் என்றஎண்ணமும் இந்திய மக்களிடம் இல்லை.
அதே நேரத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்பதும் எங்களுக்கு நன்றாகத்தெரியும். அமைதி, பாதுகாப்பு, படை பலம் ஆகியவற்றைக் கொண்டே நாங்கள் அதை அடக்கி விடுவோம்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 1373வது தீர்மானத்தின் படி பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார் வாஜ்பாய்.
-->
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications