திருச்சி அருகே விஷ சாராயத்திற்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் சின்னக்கவுண்டன்துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த 2 கூலித் தொழிலாளர்கள் விஷச்சாராயம்குடித்து மரணமடைந்தனர்.
சின்னக் கவுண்டன் துறை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர் இருவரும், அருகில் உள்ளவீரமணிப்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்றனர். அங்கு சாராயம் வாங்கிக் குடித்தனர். பின்னர் வீடு திரும்பினர்.
வீட்டுக்குத் திரும்பிய பிறகு அவர்களுக்கு வாந்தியும், மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும்சுருண்டு விழுந்து இறந்தனர். அவர்கள் குடித்தது விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications