சென்னை தீ விபத்தில் 7 தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை செளகார்பேட்டையில் ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 தீயணைப்பு வீரர்கள்படுகாயமடைந்தனர்.

அதே போல புரசைவாக்கம் பகுதியில் ஏற்பட்ட இன்னொரு தீவிபத்தில் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

கோவிந்தப்ப நாயக்கன் தெரு பகுதியில் அந்த ரசாயன நிறுவனம் உள்ளது. அங்கு பல வேதிப் பொருட்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளன.

அங்கு திடீரென தீப்பிடித்துக் கொண்டது. வேதிப் பொருட்கள் என்பதால் தீ வேகமாக பரவியது. அந்தப் பகுதிமுழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நிறுவனத்திற்கு பக்கத்தில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியது.

8 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தன. இதில் 7 தீயணைப்பு வீரர்கள்காயமடைந்தனர். ஒரு வீரரின் தோல் முழுவதும் உரிந்து விட்டது.

இந்தப் பகுதியில் மேலும் சில கெமிக்கல் நிறுவனங்கள் இருப்பதாகவும், இங்கு அலட்சியமான முறையில் வேதிப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

புரசைவாக்கத்தில் ..

இந் நிலையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் மற்றொரு தீவிபத்து நடந்தது.அங்குள்ள கோவில் திருவிழாவின்போது தீ பரவி குடிசைகளில் பற்றியது.

காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி 500 குடிசைகளை சேதப்படுத்தியது. பல லட்சம் பொருட்களும்சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+