சங்கராச்சாரியார் தமிழை பழிக்கலாமா?: தமிழ் அமைப்புகள் கேள்வி
சென்னை:
தமிழ் வழிபாட்டுக்கும், தமிழ் குடமுழக்குக்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதை காஞ்சிப்சங்கராச்சாரியார் உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தலைநகர் தமிழச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
கரூர் அருகே திருமுக்கூடலூரில் தமிழ் மந்திரங்களை அர்ச்சித்து குடமுழுக்கு செய்ய விரும்பிய மக்களை அக் கோவில் அர்ச்சகர்கள்கேவலப்படுத்தியுள்ளனர். தமிழில் மந்திரம் சொன்னால் நாட்டுக்குக் கேடு வரும் என்று கேடு கெட்டத்தனமாகப் பேசி தமிழையும்தமிழனையும் கேவலப்படுத்தியுள்ளனர்.
இந்த அர்ச்சகர்களின் கருத்தை காஞ்சி சங்கராச்சாரியாரும் ஆமோதித்தது பெரும் வருத்தம் தருகிறது. நாத்திகரான கருணாநிதிக்கு கடவுள்குறித்துப் பேச தகுதியில்லை என்று கூறியுள்ள சங்கராச்சாரியாருக்கு கோவிலில் தமிழைப் பயன்படுத்தினால் அவமானம் என்று கூறும்உரிமையைத் தந்தது யார்?
தமிழக கோவில்களில் தமிழை பயன்படுத்த உரிமை இல்லை என்றால் வேறு யாருக்கும் இங்கு உரிமை இல்லை.
தமிழகத்தில் தமிழ் மக்கள் தமிழில் வழிபடுவது பிறப்புரிமை. இதில் சங்கராச்சாரியார் தலையிட உரிமை இல்லை.
ஜெயேந்திரர் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழைப் பழிக்கும் அனைத்து ஆன்மிகவாதிகளும் இந்தப் போக்கை உடனேகைவிடுவது நல்லது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications