வீட்டுக்குள் வந்த "அழையா விருந்தாளி"
திருச்சி:
திருச்சி அருகே குடமுருட்டி ஆற்றிலிருந்து வந்த முதலை ஒன்று ஒரு வீட்டுக்குள் புகுந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
திருச்சி அருகே உள்ள குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வீட்டுக்குள் நேற்றுஇரவு ஒரு முதலை நுழைந்து விட்டது.
திடீரென்று நுழைந்து விட்ட இந்த அழையா விருந்தாளியைக் கண்டதும் அந்த வீட்டிலுள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
வீட்டுக்குள் முதலை புகுந்த விஷயம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. உடனே தைரியம் வாய்ந்த சிலஆண்கள் கம்பு, கயிறுகளுடன் அந்த வீட்டுக்குள் புகுந்தனர்.
வீட்டின் ஒரு ஓரத்தில் "ஜாலி"யாகப் படுத்திருந்த அந்த முதலையை அவர்கள் ஒன்று சேர்ந்து வளைத்துப் பிடித்தனர்.பின்னர் கயிறால் அந்த முதலையைக் கட்டினர்.
இதற்குள் போலீசாரும் வந்து சேர்ந்தனர். இதையடுத்து அந்த முதலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்குள்விடப்பட்டுள்ளது. அந்த முதலையை ஏராளமானவர்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
நீண்ட காலமாக வற்றிக் கிடந்த காவிரி ஆற்றில் கடந்த ஒரு வார காலமாகத் தான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட ஒரு முதலை தான் இவ்வாறு வீட்டுக்குள் நுழைந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
விரைவில் அந்த முதலையை வனத்துறையிடம் ஒப்படைக்கப் போவதாகப் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications