For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்க் கட்சிகளுக்கு மாநிலப் பற்று இல்லை: சாடுகிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

காவிரிப் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம் தமிழகத்தின் மீது தங்களுக்குக் கொஞ்சம் கூடபற்றே இல்லை என்பதை எதிர்க் கட்சிகள் நிரூபித்து வருகின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாகசாடியுள்ளார்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் என்ற இடத்தில் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகஆண்டிப்பட்டி கல்லூரி தொடக்க விழா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார். அப்போதுஅவர் பேசுகையில்,

காவிரிப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் வாய் மூடி, அமைதி காத்து வருகின்றன. இதன் மூலம் தமிழகத்திற்குபெரும் துரோகத்தை அவர்கள் புரிந்து வருகிறார்கள்.

காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு பட்டு வரும் வேதனையைக் கண்டு சில எதிர்க்கட்சித் தலைவர்கள்மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழகத்தின் மீது கொஞ்சமும் பற்றேகிடையாது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரி நீரைப் பெறுவதில் தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட பின்பு தான் ஓரளவு நீர் கிடைத்துவருகிறது. இதில் அரசுக்கு சிறிய அளவிலேயே வெற்றி கிடைத்துள்ளது. அதையும் கூட பாராட்ட இந்த எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை.

நான் எதைச் செய்தாலும் அதில் குறை காணத் துடிக்கிற குறுமதியாளர்கள் தமிழகத்தில் இருக்கத் தான்செய்கிறார்கள். ஆனால் அத்தகைய வெட்டிப் பேச்சு வீரர்களுக்கெல்லாம் பதில் சொல்வது வீணான கால விரயம்.

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று எம்.ஜி.ஆர். கற்றுக் கொடுத்த பாடம் தான்எனக்கு அனைத்து முயற்சிகளிலும் உறுதுணையாக இருக்கிறது.

"என் இதயம் தூய்மையாக இருப்பதால் என் வலிமை பத்து பேர் வலிமைக்குச் சமமானது" என்றான் ஆங்கிலக்கவிஞன் லார்டு டென்னிஸன். ஆனால் என் இதயம் தூய்மையாக இருப்பதால் எனக்கு ஆறரை கோடிதமிழர்களின் வலிமையும் பலமும் எனக்குக் கிடைத்துள்ளது.

தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் அவர்களின் வலிமையும் என் வலிமை என்று தானே பொருள்?இந்தப் பாசப் பிணைப்பை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது.

தேனியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். அதற்கு முதல் கட்டமாக ரூ.12 கோடி செலவில் 300 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

பின்னர் ஆண்டிப்பட்டியில் தொகுதி குறித்த பல்வேறு தகவல்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தவிவரங்களைத் தெரிந்து கொள்ளும் தொடு திறன் கம்ப்யூட்டர் வசதியை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X