அதிமுகவினர் கூட்டத்தில் பயங்கர கோஷ்டி சண்டை: அடிதடியில் பலர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் பெரும் ரகளைஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அவர்களைப் படம் பிடித்த பத்திரிக்கை நிருபர்களையும் மொத்தினர்.

கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்க நேற்று இந்தக் கூட்டம் நடந்தது. ஆரணி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் வடுகசாத்துசங்கர் என்பவர் பேசும்போது அரசு டெண்டர்களை சில தலைவர்களே ஒதுக்கிக் கொள்வதாகவும் அதை அதிமுகவினர்அனைவருக்கும் பகிர்ந்து தருவது இல்லை என்றும் பேசினார்.

இந்தப் பேச்சை அதிமுக தொண்டர்கள் கை தட்டி வரவேற்றனர்.

அப்போது அவரது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஆரணி ஒன்றியச் செயலாளரான பையூர் சந்திரன் எழுந்து நின்று பேச்சை நிறுத்துடாஎன்றார். இதையடுத்து இரு தரப்பினரும் போடா, வாடா என்றரீதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த எம்.எல்.ஏ. ஜெமினி ராமச்சந்திரனை நூற்றுக்கணக்கானஅதிமுகவினர் சூழ்ந்து கொண்டனர். அவர் ஜாதிரீதியில் செயல்படுவதாகவும அதிமுகவில் இருந்து கொண்டே வன்னிய பேரவைமாநாட்டுக்கு நன்கொடை தந்ததாகவும் கூறினர்.

அப்போது எம்.எல்.ஏவின் ஜால்வாரான பையூர் சந்திரன் அந்த அதிமுகவினரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.பத்திரிக்கைகாரன் அப்படித்தான் நியூஸ் போடுவான். அதை படிச்சிட்டு வந்து எம்.எல்.ஏவையே கேள்வி கேக்குறீங்களா? என்றுஎகிறினார்.

இதையடுத்து மைக்கைப் பிடித்துக் கொண்டு எதிர் கோஷ்டி அதிமுகவினரையும் பத்திரிக்கையாளர்களையும் தரக் குறைவாக பேசஆரம்பித்தார். இதை எம்.எல்.ஏ. ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வடுகாத்து சங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மேடையை நோக்கி முன்னேறினர். உடனே பேச்சைநிறுத்துமாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதைப் படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை போட்டோகிராபர்களை எம்.எல்.ஏவின் கோஷ்டியினர் தாக்க ஆரம்பித்தனர்.தினத்தந்தி நிருபர் விஜய்குமாரின் கேமராவைப் பறிக்க முயன்றனர். அதை அவர் தடுத்தபோது அவரைத் தாக்கினர். கீழே தள்ளிஉதைத்தது அந்தக் கும்பல். இதையடுத்து நிருபர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதையடுத்து இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசியும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டனர்.கிட்டத்தட்ட அரை மணி நேரம் அதிமுகவினர் கடும் ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அருகாமையில் இருந்த கடைகள் அச்சம் காரணமாக மூடப்பட்டன.

இந்தச் சண்டையில் பலரது சட்டைகள் கிழிந்தன. பலர் காயமடைந்தனர். உருவப்பட்ட வேட்டிகளை கையில் அள்ளிக் கொண்டுபலரும் கூட்டத்தைவிட்டு ஓடினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+