வறட்சி மாவட்டங்களைப் பார்வையிட டெல்லி குழு வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரடி ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து 8 பேர்கொண்ட நிபுணர் குழு வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறது.
மத்திய வேளாண்மைத்துறை இணைச் செயலர் ஜோகிந்தர் சிங் தலைமையில் வரும் இக்குழுவினர் நான்குபிரிவுகளாகப் பிரிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வறட்சி நிலைகளைப் பார்வையிடஉள்ளனர்.
அதன் பின்னர் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பிறகு டெல்லி சென்று மத்தியஅரசிடம் அறிக்கை கொடுப்பார்கள்.
ஏற்கனவே, மத்திய அரசிடம், தமிழக அரசு வறட்சி நிவாரணமாக ரூ.720 கோடி நிதியுதவியை கோரியுள்ளது. 19மாவட்டங்களில் வறட்சி மோசமாக உள்ளதாகவும் தனது அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்தே தற்போது டெல்லி குழு தமிழகம் வரவுள்ளது.












Click it and Unblock the Notifications