கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்த 10 தமிழ் சிறுமிகள் மீட்பு
கோயம்புத்தூர்:
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கேரளாவில் வீட்டு வேலைக்காக கடத்திச் செல்லப்படவிருந்த 10 சிறுமிகளைகோயம்புத்தூரில் போலீஸார் மீட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற 2 பெண்களையும் போலீஸார் கைதுசெய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள குரும்பூர், மேல்மலையனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தசிறுமிகள், கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கோயம்புத்தூர் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சென்னையிலிருந்து கேரளா செல்லும் ரயிலை நேற்று இரவு கோயம்புத்தூரில் நிறுத்தி போலீஸார்சோதனை செய்தனர்.
அப்போது 8 முதல் 13 வயது வரையிலான 10 சிறுமிகளை போலீஸார் பார்த்து, அவர்களை விசாரித்த போது,அவர்கள்தான் கடத்தப்படும் சிறுமிகள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அந்தச் சிறுமிகளை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை போலீஸார்கைது செய்தனர்.
கேரளாவில் வீட்டு வேலை செய்வதற்காக இந்த சிறுமிகளை அவர்களுடைய பெற்றோரிடம் கூறி அந்தப்பெண்கள் அழைத்துச் செல்வது வழக்கமாம். இதற்கு முன்பு இதுபோல ஆறு சிறுமிகள் இதுபோல கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கேரளா செல்லும் சிறுமிகளை 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களது பெற்றோர் சென்று பார்த்து சிறுமிகளுக்காகவழங்கப்படும் சம்பளத்தை வாங்கி வருவது வழக்கமாம்.
மீட்கப்பட்ட 10 சிறுமிகளும் தற்போது கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுடைய பெற்றோரிடம் விசாரித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் குஜராத்துக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த 9 தமிழ் சிறுவர்கள் ஆந்திராவின் கூடூர் ரயில் நிலையத்தில்மீட்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications