முழு வேகத்தில் வறட்சி நிவாரணப் பணிகள்: ஜெ. விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் வறட்சி நிவாரணப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசுகேட்டபோது, அம்மாதிரி ஒரு மாவட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு நிதியுதவி செய்யவில்லை என்று இப்போது ஜெயலலிதா புகார்கூறுவதாக சமீபதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் முழு வீச்சில் வறட்சி நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் எந்தவிதமான தேக்கமும் இல்லை.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வறட்சி பாதித்துள்ளது. இருப்பினும் இவற்றை வறட்சியால் பாதித்தமாவட்டங்களாக மாநில அரசு அறிவிக்கவில்லை. காரணம், அப்படி அறிவித்தால், இந்த மாவட்டங்களுக்குட்பட்டஊராட்சிகளைச் சேர்ந்த, விவசாயிகளுக்குரிய கடன் வட்டி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் ஊராட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் கிடைக்காது. ஏற்கனவே மாநில அரசு நிதி நெருக்கடியில்திணறிக்கொண்டுள்ள நிலையில் வருவாய் இழப்பு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் வறட்சிபாதித்த மாவட்டங்களை அறிவிக்கவில்லை.
வறட்சியால் பாதித்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையிலும் அமைச்சர்களின்மேற்பார்வையிலும் அனைத்துவிதமான நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications