மாஜி திமுக அமைச்சர் மீது வழக்கு: அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கோரிக்கை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சரான புலவர் செங்குட்டுவன் மீது ஊழல் வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதியைலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் (டி.வி.ஏ.சி) கோரியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் இருந்தவர் புலவன்செங்குட்டுவன்.
இவர் மீது ராசிபுரம் அதிமுக எம்.எல்.ஏவான சுந்தரம், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார்செய்திருந்தார். அதில், கால்நடைத்துறைக்கு மருந்து வாங்கியதில் செங்குட்டுவன் ஏராளமான அளவிற்குமுறைகேடுகள் புரிந்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது சுந்தரம் கொடுத்துள்ள புகார் குறித்து விரிவானவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் அதுகுறித்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, செங்குட்டுவன் மீது வழக்குத்தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இதையடுத்து இன்னும் 2 மாத காலத்திற்குள் செங்குட்டுவன் மீது வழக்குத்தொடர அனுமதி பெறப்பட்டு விடும்என்றும் தெரிவிக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications