கல்லூரிக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்த எம்.எல்.ஏ.
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ரவுடிகளுடன் புகுந்து கலாட்டா செய்தார் திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.உமாதேவன். கல்லூரியின் முதல்வரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய எம்.எல்.ஏ. அவரைக் கொன்று விடுவதாகவும்மிரட்டியுள்ளார்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும்போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முறியடிக்க எவ்வளவோ முயற்சிகளை அரசு எடுத்தாலும் எதுவும் பலன்தரவில்லை.
சில டுடோரியல் கல்லூரி மாணவர்களையும் அதிமுக மாணவர்கள் சங்கத்தினரையும் சென்னைக்கு அழைத்துப் பேசியஜெயலலிதா, மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டதாகக் கூறினார்.
இதையடுத்து கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றார். ஆனால், மாணவர்கள் கல்லூரிகளை தொடர்ந்து புறக்கணித்துவருவதால் கல்லூரிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதையடுத்து ரவுடித்தனத்தைப் பயன்படுத்தி கல்லூரிகளை இயங்கச் செய்யும் முயற்சிகளில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சி காரைக்குடியில் இருந்து துவக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியை மீண்டும் இயங்க வைத்து அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக திருப்பத்தூர்அதிமுக எம்.எல்.ஏவான உமா தேவன் தனது அடியாட்களுடன் சென்று கலாட்டாவில் ஈடுபட்டார்.
நேற்று 4 கார்களில் அதிமுகவினர் மற்றும் ரவுடிகளுட அழகப்பா கலைக் கல்லூரிக்குச் சென்றார் உமா தேவன். கல்லூரி முதல்வர்சுப்பிரமணியக் கவிராயரின் அறைக்குள் நுழைந்த உமா தேவன் தலைமையிலான கும்பல் அவரை கெட்ட வார்த்தைகளால்திட்டியது.
ஏன்டா காலேஜை மூடிட்டு தண்டச் சம்பளம் வாங்கிட்டு இருக்கியா? அம்மா பேரைக் கெடுக்க இப்படி காலேஜ் ஸ்டிரைக்நடத்துறீங்களா? பசங்களை காலேஜுக்கு வர வக்கலைன்னா உன்னை அடிச்சே கொன்னுடுவோம் என்று அக் கும்பல் மிரட்டபயந்து போன முதல்வர் அவர்களை கையெடுத்துக் குடும்பிட்டுள்ளார்.
ஆனால், அதைக் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏவின் கைத்தடிகள் வெளியே வந்தா உன்னைக் கொல்வோம்டா என்று ஒருமையில்திட்டி எழுத முடியாத (மிக மிக மோசமான வார்த்தைகள்) வார்த்தைகளைப் பிரயோகித்துத் திட்டியுள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏவும் ரவுடிகளும் கார்களில் ஏறி பறந்துள்ளனர்.
இந்த விவரம் இன்று தான் தெரியவந்தது. இதையடுத்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில்கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கோபம் நிலவுகிறது.
மிகுந்த மரியாதைக்குரிய ஒரு கல்லூரியின் முதல்வரை அவரது மூத்த வயது, படிப்புக்குக் கூட மரியாதை தராமல் மோசமானவார்த்தைகளால் ஒரு எம்.எல்.ஏவே திட்டியுள்ளதும், உன்னைக்க் கொல்வேன் என்று ரவுடிகளை வைத்துக் கொண்டுமிரட்டியுள்ளதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உமா தேவனின் இந்தக் காட்டு மிராண்டி செயலைக் கண்டித்து காரைக்குடி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளைச் சேர்ந்தஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்த உமா தேவனை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணியக் கவிராயர் கண் கலங்கிவிட்டார். தன்பிறப்பு குறித்தும், தன் குடும்பம் குறித்தும் எம்.எல்.ஏ. பேசிய நா கூச வைக்கும் வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாதஅளவுக்கு மோசமானவை என்றார்.
எம்.எல்.ஏ. உமா தேவனின் தனது வாயை பினாயில் ஊற்றி கழுவுவது நல்லது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications