ஆத்தூர் வெடி விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி ஆளுநரிடம் திமுக மனு
சென்னை:
ஆத்தூரில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தமிழகஆளுநர் ராமமோகன் ராவிடம் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் இன்று மனு கொடுத்தனர்.
ஆத்தூர் வெடி விபத்தில் 21 பேர் வரை கொல்லப்பட்டும் இதுவரை இதுகுறித்து நீதி விசாரணை நடத்த தமிழகஅரசு உத்தரவிடவில்லை என்று திமுக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வெடி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கைவிடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்குச் சென்ற திமுக எம்.எல்.ஏக்களும்எம்.பிக்களும், இந்த வெடி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஆளுநரிடம்மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வெங்காய வெடி மூட்டையிலிருந்து கீழே விழுந்த சில வெங்காய வெடிகள் வெடித்ததாலும் காரிலிருந்த கேஸ்சிலிண்டர் வெடித்ததாலும் தான் இந்த பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறுவதைநம்ப முடியவில்லை.
மேலும் 21 பேரைப் பலி வாங்கியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணைநடத்துவார் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதிலிருந்தே இந்த வெடி விபத்தை தமிழக அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவதோடுஉண்மை நிலையை மறைக்கவும் விரும்புகிறது.
மேலும் இது வெடி விபத்து இல்லை என்றும் ஏதோ குண்டு தான் வெடித்து விட்டதாகவும் அப்பகுதியில் உள்ளபாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர்.
எனவே இந்தப் பயங்கரமான சம்பவம் குறித்து உண்மை நிலையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகர முன்னாள் மேயர் ஸ்டாலின் உள்ளிட்டஎம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து இந்த மனுவைக் கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், இதுகுறித்து தமிழக அரசிடம் இதுகுறித்துப்பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்ததாகக் கூறினார்.
இது போன்ற ஒரு மனு பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருக்கும்அனுப்பப்பட்டுள்ளது. துரைமுருகன், ஸ்டாலின் மற்றும் எம்.பிக்களான குப்புசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர்இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுவரை 6 பேர் கைது:
இதற்கிடையே ஆத்தூர் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு பெண் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்திலிருந்து இந்த வெங்காய வெடிகளை ஆத்தூருக்குக் கொண்டு வந்தவர்கள் தான்இந்த ஆறு பேரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications