குஜராத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 42 சிறுமிகள் மீட்பு
சென்னை:
தமிழகத்தில் இருந்து கூலி வேலைக்காக குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருந்த 42 சிறுமிகளை ரயில்வே போலீசார்மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி, முனியன்குளம், வேலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். வீட்டில்நிலவும் வறுமை காரணமாக இவர்களை குஜராத்தில் போர்பந்தரில் உள்ள ஒரு மீன் தொழிற்சாலைக்கு வேலைக்கு பெற்றோர்கள்அனுப்பியுள்ளனர்.
இந்தத் தொழிற்சாலையைச் சேர்ந்த அருள் என்பவர் இந்த ஊர்களுக்கு வந்து வேலை வாய்ப்பு குறித்துக் கூறியுள்ளார். அவர்சொன்னதைக் கேட்டு 98 பேரின் பெற்றோர்கள் தங்கள் மகள்களை வேலைக்கு அனுப்பியுள்ளனர். இதில் 42 பேர் 16 வயதுக்குஉட்பட்ட சிறுமிகள்.
இவர்களை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அருள் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தார். எக்மோர் ரயில் நிலையத்தில்இறங்கிய இவர்கள் நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் மூலம் குஜராத்துக்குக் கொண்டு செல்ல இருந்தார். நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள்ஏறிக் கொண்டிருந்தபோது ரயில்வே போலீசார் சந்தேகப்பட்டு அவர்களை விசாரித்தனர்.
அப்போது தான் இவர்கள் வேலைக்காக குஜராத்துக்குச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த 98 பேரில் 42 சிறுமிகளைரயில்வே போலீசார் தனியே பிரித்து அழைத்துச் சென்றனர்.
அவர்களை புரசைவாக்கத்தில் உள்ள சமூக நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக அருள் உள்பட அவருக்கு துணையாக இருந்த 4 பெண்களையும் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. நந்தகுமார் கூறுகையில், தமிழகத்தில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து ரயில்வே போலீசில் தனிப் படை அமைக்கப்பட்டு ரயில்நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தனிப் படையினர் தான் இந்தச் சிறுமிகள் குஜராத்துக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தடுத்தனர் என்றார்.
கடந்த 14ம் தேதி தான் தமிழகத்தில் இருந்து குஜராத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 50 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.
இதுபோல சில தினங்களுக்கு முன் குஜராத்துக்குக் கடத்தப்படவிருந்த 9 சிறுமிகளை ஆந்திர ரயில்வே போலீஸார்மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் சிறுமிகளை குஜராத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி நடந்துள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications