தமிழத்தில் சாப்ட்வேர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டம்
சென்னை:
தமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டார்.
தகவல் தொழில்நுட்பத்துறையைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இந்தப்புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற "கனெக்ட் 2002" என்ற தகவல் தொழில்நுட்பத் துவக்க விழாவின் போதுஜெயலலிதா இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,
கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழிலேயே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளை நடத்தவும் இந்தப் புதியகொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் துறையில் நாட்டிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் அளவுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பக்கொள்கை நிச்சயம் உதவும்.
கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்களுக்கு இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை நிச்சயம் ஒரு புதியசகாப்தத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புக்களைஅதிகரிக்கவும் புதிய கொள்கை வழி செய்கிறது.
கம்ப்யூட்டர் துறையில் தொழில் தொடங்க வரும் அனைவரையும் தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துவரவேற்கிறது என்றார் ஜெயலலிதா.
இரண்டு நாட்கள் நடக்கும் "கனெக்ட் 2002" மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்ல,அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானகம்ப்யூட்டர் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications