நாளை தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்: ஜெ. நடவடிக்கை
சென்னை:
போதையில் இருந்த விவசாயி நீரில் குதித்து இறந்ததால் தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை கர்நாடகம் நிறுத்தியுள்ளதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
மேலும் நாளை மாலை அனைத்துக் கட்சிகளைக் கூட்டி விவாதிக்கவும் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை நேரடியாகபிரதமரைச் சந்தித்து சமர்பிக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இந்த விவசாயியின் சாவைக் காரணம் காட்டி தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது. இதனால் வரும் எந்தசவாலையும் சந்திக்கத் தயார் என்று கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளது.
இதையடுத்து இன்று அமைச்சரவையைக் கூட்டி விவாதித்த ஜெயலலிதா பின்னர் சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனைநடத்தினார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
கபினி அணைக் கட்டுப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதால் இனியும் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம்கூறியுள்ளது. இது ஒரு சப்பைக் கட்டு வாதமாகும்.
கர்நாடக மாநில அரசால் சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற முடியாவிட்டால் அந்த அரசை உடனே கலைத்துவிட வேண்டும்.
விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் போன்றவற்றை மாநில அரசே மறைமுகமாக நடத்தியது. இதன்மூலம்மக்களைத் தூண்டிவிட்டது.
சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு இனியும் தண்ணீர் விட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகத்தின் இந்தச் செயல் முழுக்கமுழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்.
இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தை கர்நாடகம் அவமதித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்தச் செயலை எதிர்த்து நீதிமன்றஅவமதிப்பு வழக்குத் தொடருவோம்.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்து நேரில் வழங்குவேன் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications