இலங்கை மீனவர்கள் சிறை பிடித்த 103 தமிழக மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்:
இலங்கை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 103 ராமேஸ்வரம் மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலைக்கும் முன்பாக இலங்கையின் தலைமன்னார் பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் ராமேஸ்வரத்தைச்சேர்ந்த மீனவர்கள் 25 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் மீன் பிடிப்பதற்காக வந்த இலங்கை மீனவர்கள், அந்த 25 படகுகளையும் அதிலிருந்த103 மீனவர்களையும் சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இது தங்கள் பகுதி என்றும் இங்கு தமிழக மீனவர்கள்வந்து மீன் பிடித்தது தவறு என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டுமத்திய அரசை நாடியது. மத்திய அரசும் உடனே இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறியது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியத் தூதரகஅதிகாரிகளும் உடனடியாக தலைமன்னார் மாவட்ட கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களைவிடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட 103 மீனவர்களையும் விடுவிக்குமாறு உள்ளூர் மீனவர்களுக்கு இலங்கைஅரசு உத்தரவிட்டது. அவர்களும் உடனடியாக மீனவர்களை விடுவித்தனர். அதற்கு முன்பாக தமிழக மீனவர்கள்இனிமேல் இந்தப் பகுதியில் வந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற உறுதி மொழியையும் அந்நாட்டு மீனவர்கள்பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 103 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படை மீட்டுராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றது.
இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் நிரந்தரப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தரதைத் தொடர்ந்து அந்நாட்டின்வடகிழக்குப் பகுதியில் அந்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கைஅரசு சமீபத்தில் நீக்கியது.
இதையடுத்து மன்னார் பகுதியில் மீன் பிடித் தொழிலைத் துவங்கிய இலங்கை மீனவர்கள், இப்பகுதியில் தமிழகமீனவர்கள் வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாகத் தான் அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள்சிறைப் பிடித்து வைத்தனர்.
இந்தத் தடை நீக்கத்திற்கு முன்பு இப்பகுதிகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications