ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார்: கர்நாடகம்
டெல்லி:
காவிரி விவகாரத்தை ஜெயலலிதா அரசியலாக்கி ஆதாயம் தேடுவதாக கர்நாடகம் கூறியுள்ளது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். இருந்தாலும் எங்களுக்கு பல வகைகளிலும் நெருக்குதல்கொடுத்து வருகிறார் ஜெயலலிதா. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்.
நீதிமன்ற அவமதிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். தண்ணீர் இருந்தால் தானே தர முடியும். எங்கள் அணைகளில் நீர்நிரம்பும்போதெல்லாம் தமிழகத்துக்கு தந்து கொண்டு இருந்தோம். இப்போதுள்ள நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
விவசாயிகள் போராட்டத்தால் எங்கள் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றார் கார்கே.
நேற்று சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதால் தான் தண்ணீரைத் தருவதை நிறுத்துவதாக கர்நாடகம் கூறியது. சட்டம் ஒழுங்கைபராமரிக்க முடியாத அரசை உடனே கலைக்க வேண்டும் என்றார் ஜெயலலிகா.
இதையடுத்து கர்நாடகம் தனது பேச்சை மாற்றிக் கொண்டுள்ளது.
கடித ஆராய்ச்சி நடத்தும் கர்நாடகம்:
தமிழகத்துக்கு மீண்டும் தண்ணீர் விடுமாறு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள கடிதம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுப்போம் என கர்நாடகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா கூறுகையில்,
டெல்லியில் நாளை கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அரசின் கடிதம் குறித்து ஆராயப்படும்.
இம் முறை எங்கள் பயிர்கள் நீருக்காக காத்துக் கொண்டுள்ளன. தமிழகம் இப்போது தான் சம்பா பயிரை பயிரிடவே போகிறது.இதனால் எங்கள் பயிர்களைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும். இதனால் தான் நீரை நிறுத்தினோம். அதே நேரம் தமிழகத்தின்கடும் வறட்சியையும் கருத்தில் கொள்வோம் என்றார்.
அம்பரீஷ் தொடர்ந்து வசனம்:
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதை தமிழ் படங்களில் தலை காட்டி தமிழர்களின் பணத்தை ஈட்டியஅம்பரீஷ் எம்.பி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அம்பரீஷ் கூறுகையில், மாண்டியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை நாடகம் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார். அவர தனது பதவிக்கு உரிய மரியாதையுடன் பேச வேண்டும். இந்தப் போராட்டம் உண்மையானது.உணர்ச்சிப்பூர்வமானது என்றார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications