சென்னை சாலைகளை அலங்கோலப்படுத்திய 14 குப்பை லாரிகள் பறிமுதல்
சென்னை:
சென்னை மாநகர சாலையோரங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 14 லாரிகளை சென்னை மாநகராட்சிஅதிகாரிகளும்,காவல்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்தனர்.
சென்னை நகரின் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சாலைகளில் நடக்க முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் போலீஸாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் உத்தரவின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்குழு, போலீஸாரின் உதவியுடன் சென்னையின் பல பகுதிகளிலும் சோதனை நடத்தியது.
ராயபுரம், வியாசர் பாடி, எருக்கஞ்சேரி சாலை, எழும்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில்சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக சாலைகளில் வந்து குப்பை கொட்டிய 14 லாரிகள்பறிமுதல் செய்யப்பட்டன.
சாலைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications