கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் 3 பேர் வேட்பு மனுத்தாக்கல்
மதுரை:
உயர் ஜாதியினரின் கடும் மிரட்டல்களையும் மீறி மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர்பதவிக்கு கட்டராமன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய தனித் தொகுதி கிராமப் பஞ்சாயத்துகளுக்குகடந்த சில ஆண்டுகளே உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாமல் இருந்தது.
அங்குள்ள உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்இந்த நிலை.
இந் நிலையில், சில மாதங்களுக்கு முன் அங்கு தேர்தல் நடந்தது. இருப்பினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் அடுத்த சில நாட்களிலேயே மிரட்டல் காரணமாக பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர்.
இந் நிலையில் தற்போது 3 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 16ம் தேதி தொடங்கியது. 23ம் தேதி கடைசி நாளாகும்.
கீரிப்பட்டியில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டராமன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கிராம மக்கள்சார்பில் அவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, பாப்பாப்பட்டியில் சின்னயன் மற்றும் சடையாண்டி ஆகிய இருவரும் வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர். நாட்டார் மங்கலத்தில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications