தபால் நிலையத்தில்ரூ. 4 லட்சம் மதிப்பு பத்திரங்கள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தபால் நிலைய சேமிப்புப் பத்திரங்களை சிலர்திருடிச் சென்று விட்டனர்.
சின்னாளபட்டியில் உள்ள தபால் நிலைய ஊழியர்கள் சனிக்கிழமை காலை தபால் நிலையத்தைத் திறந்துபார்த்தபோது சேமிப்புப் பத்திரங்கள் திருடப்பட்டதை அறிந்தனர்.
சில பத்திரங்களே காணாமல் போயுள்ளதாக முதலில் நினைத்த அவர்கள் பின்னர் ஆய்வு செய்து பார்த்தபோது, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சேமிப்புப் பத்திரங்களை யாரோ திருடி விட்டதை அறிந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சின்னாளபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications