தாமரைக்கனி வீட்டை தோண்ட போகும் லஞ்ச-ஒழிப்புப் போலீஸ்
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவரான தாமரைக்கனியிடம் லஞ்ச- ஒழிப்புப் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அடுத்த மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் அவரது வீட்டைத் தோண்டி சோதனை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய தாமரைக்கனியை லஞ்ச-ஒழிப்புப் போலீசார் வாட்டி எடுத்து வருகின்றனர். முதல்வர்ஜெயலலிதாவை அவர் மிக ஆபாசமாக வர்ணித்து பொதுக் கூட்டத்தில் பேசியதையடுத்து அவருக்கு மிக அதிக தொல்லைகள் தரஆரம்பித்துள்ளது அரசு.
நகராட்சித் தலைவரான அவரது வீட்டுக்கே குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அவரது சொத்துக்கள குறித்த விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு அவருக்கு லஞ்ச-ஒழிப்புப் போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து தான்கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய தாமரைக்கனி தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அப்போது லஞ்ச-ஒழிப்புப் போலீசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாமரைக்கனி மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதனால்அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டியதில்லை என்றார்.
இந் நிலையில் வரும் 19ம் தேதிக்குள் சொத்துக் கணக்கை லஞ்ச- ஒழிப்புப் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என தாமரைக்கனிக்குமீண்டும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு தாமைரக்கனி பதில் அனுப்பவதற்குள் நேற்று விருதுநகர் மாவட்ட லஞ்ச-ஒழிப்புப் போலீசார் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில்அவரது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அடுத்த மாதம் 7,8ம் தேதிகளில் உங்களது வீடுகளைத் தோண்டி சோதனை நடத்தப் போகிறோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனதாமரைக்கனியிடம் போலீசார் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து தாமரைக்கனி கூறுகையில், மடியில் கனம் இருந்தால் தான் மனதில் பயம் இருக்கும். வீட்டை தோண்டி சோதனை நடத்திக்கொள்ளலாம் என்றார்.
திருநெல்வேலியில் இருந்து வரவுள்ள பொதுப் பணித்துறை பொறியாளர்கள் வரும் 7,8ம் தேதிகளில் தாமரைக்கனியில் வீட்டைத்தோண்டிப் பார்க்க உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications