ஆத்தூர் குண்டுவெடிப்பு: பெண் தலைமறைவு- 1.5 டன் வெடிகள் பறிமுதல்
மேட்டூர்:
21 உயிர்களை பலி வாங்கி, 25 வீடுகளைத் தரைமட்டமாக்கிய ஆத்தூர் வெடி விபத்துக்குக் காரணமான முக்கிய பெண் குற்றவாளிதலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்த வெடி விபத்து நடந்தது. இது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,முக்கிய குற்றவாளியான ஆராயி என்ற பெண் தலைமறைவாகிவிட்டார்.
இவரது வீட்டில் தான் வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெண் பாண்டிச்சேரியில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து தனி போலீஸ் படை பாண்டிச்சேரி சென்றுள்ளது. வேறு இடங்களிலும் அவரைத் தேடும் பணி நடக்கிறது.
இதற்கிடைய சேலம் மாவட்டம் முழுவதுமே வெடிகளை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தீபாவளி சீட்டு பிடிப்பவர்கள், வெடிக் கடை வைப்பவர்கள்ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்தச் சோதனைகள் மேட்டூரிலும் நடந்தன. தத்தமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஒரு வீடும் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு 24 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் சிக்கின.இவற்றின் எடை 1.5 டன்களாகும். அந்த வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டையும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல இன்னொரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வெடிகளைத் தயாரிக்க உதவும் ரசாயன பொருள்களும் கருவிகளும்சிக்கின. அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வீடும் சீல் வைக்கப்பட்டது.
-->
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications