தடை செய்யப்பட்ட 50 மீன் பாடி வண்டிகள் பறிமுதல்
சென்னை:
சென்னை நகரில் தடை செய்யப்பட்டுள்ள மோட்டார் பொருத்தப்பட்ட மீன் பாடி வண்டிகளை போலீஸார்பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆட்கொல்லி வாகனமான மீன் பாடி வண்டிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று வார கால இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதையடுத்து சென்னை நகரில் ஓடும் மோட்டார் பொருத்தப்பட்ட மீன் பாடி வண்டிகளைபோலீஸார் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மீன் பாடி வண்டிகள் அதிக அளவில் இயக்கப்படும் கோயம்பேடு, பாரிமுனை மற்றும் அண்ணா சாலை பகுதிகளில்இந்த சோதனை நடத்தப்பட்டது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட மீன் பாடி வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மீன் பாடி வண்டிகளைத் தடை செய்வதற்குப் பதில் மோட்டார் வாகன சட்டத்தின் படி அவற்றைமுறைப்படுத்தி அனுமதி தர வேண்டும் என்று தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
மீன் பாடி வண்டிகளை நம்பி சென்னையில் 10,000 குடும்பத்தினர் இருப்பதாகவும், அவற்றிற்குத் தடைவிதித்திருப்பதால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications