மாணவிகள் கற்பழிப்பு புகார்: ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கற்பழிப்பு புகார் தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த 5ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியில் உள்ள நரவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்சேர்ந்த சில மாணவிகளை, அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் கற்பழித்து விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாநில கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர்கள் திடீரென்று டிரான்ஸ்பர்செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐந்து பேரும் தான் மாணவிகளை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் என்றுகூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications