மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் அக்டோபர் 24ல் தொடக்கம்
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 24ம் தேதி தொடங்கவுள்ளதாக தமிழகஆளுநர் ராமமோகன் ராவ் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களிடம் சபாநாயகர் காளிமுத்து பேசுகையில்,
அக்டோபர் 24ம் தேதி முதல் சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெறும்.
சமீபத்தில் மறைந்த தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதிகளான கிருஷ்ணகாந்த் மற்றும்ஜாட்டி ஆகியோருக்கு முதல் நாள் கூட்டத்தின் போது இரங்கல் தெரிவிக்கப்படும்.
அதன் பின்னர் ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஆறு சட்டமசோதாக்கள் குறித்துவிவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படவும் உள்ளன என்றார் காளிமுத்து.
இது வழக்கமான கூட்டத் தொடர் தான் என்றாலும், காவிரி பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில்இன்னும் ஒரு மாதத்தில் சட்டசபை கூடவுள்ளதால் இந்தக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
கடந்த மே மாதம் 10ம் தேதி தான் கடைசியாக தமிழக சட்டசபை கூடியது. அதற்குப் பின்னர் தமிழக அரசியலில்பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்த பிறகு நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டம் இது தான்என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்னும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த முடிவை அறிவிக்கஉள்ளது
இதற்கிடையே தமாகா எம்.எல்.ஏக்கள் மற்றும் அதன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் கதி என்ன என்பதுகுறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தமிழக அரசும் பல பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. காவிரிப் பிரச்சனை, கல்லூரி ஆசிரியர்வேலைநிறுத்தப் போராட்டம், நெசவாளர் பிரச்சனை, அரசு அலுவலர்கள் போராட்டம் ஆகியவை உள்ளிட்டஏராளமான பிரச்சனைகள் தமிழக அரசின் முன் உள்ளன.
இந்த அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்க் கட்சிகள் சட்டசபையில் பூதாகரமாகக் கிளப்புவதற்குத் தயாராகிக்கொண்டு வருகின்றன. எனவே இந்த மழைக்காலக் கூட்டத் தொடரிலும் வழக்கம் போலவே அனல் பறக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications