சென்னையில் சக்கப் போடு போடும் "பாபா" திருட்டு வி.சி.டிக்கள்
சென்னை:
சென்னை நகரில் திருட்டு வி.சி.டி. வேட்டை தொடர்ந்து வருகிறது.நேற்று நடந்த அதிரடி சோதனையில் ரூ.12லட்சம் மதிப்புள்ள திருட்டு வி.சி.டிக்கள், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு சாதனங்களைப் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
சென்னையில் சமீப காலமாக திருட்டு வி.சி.டிக்களின் புழக்கம் அதிகமாகி விட்டது. எங்கு பார்த்தாலும்வி.சி.டிக்களை விற்பவர்கள் மற்றும் வாடகைக்கு விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து திருட்டு வி.சி.டிக்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
"பாபா" படத்தின் வி.சி.டி. தான் தற்போது அதிக அளவில் புழக்கதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின்தோல்விக்கு அதிக அளவில் வி.சி.டிக்கள் வெளி வந்ததும் ஒருகாரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரு வேறு சோதனைகளில் மட்டும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள திருட்டு வி.சி.டிக்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாண்டி பஜார் பகுதியில் மிகப் பெரிய அளவிலான திருட்டு வி.சி.டி. பறிமுதல் நடந்துள்ளது.இங்குள்ள கடைகளில் திருட்டு வி.சி.டிக்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று திருட்டு வி.சி.டி. தடுப்பு சிறப்பு போலீஸார் வேட்டையில் இறங்கினர். அவர்களுடையவேட்டையில் ஹசன் மைதீன் என்பவர் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் புரசைவாக்கத்திலுள்ள ஒருஇடத்தை போலீஸார் சோதனையிட்டனர்.
அங்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள வி.சி.டிக்கள், அதை தயாரிக்கப் பயன்படும் கம்ப்யூட்டர், காலி வி.சி.டிக்கள்மற்றும் பிற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிம்ரன், ஸ்னேகா, மனிஷா கொய்ராலா போன்ற முன்னணி நடிகைகளின் முகத்தை மட்டும் வைத்து மிக்ஸிங் செய்துதயாரிக்கப்பட்டிருந்த ப்ளூ பிலிம் வி.சி.டிக்களும் அதில் இருந்தன. மொத்தம் 2,000 வி.சி.டிக்கள் அங்கு இருந்தன.
போலீஸாரின் மற்றொரு சோதனையில் மண்ணடி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ளபான் மசாலா பொட்டலங்கள், குத்கா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
-->
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications