லாரியுடன் ரூ. 1 கோடி ரெடிமேட் ஆடைகளை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கைது
சென்னை:
பெங்களூரிலிருந்து ரெடிமேட் ஆடைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்து கொண்டிருந்த லாரியை மடக்கிக்கொள்ளையடிக்க முயன்ற 14 பேர் கும்பலைப் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் உள்ள ஒரு ரெடிமேட் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமெரிக்காவுக்கு அடிக்கடி ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக நேற்றும் பெங்களூரிலிருந்து ரூ. 1 கோடி ரூபாய்மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் ஒரு லாரி மூலம் அனுப்பப்பட்டன.
நேற்று இரவு அந்த லாரி சென்னை-பூந்தமல்லி சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கார் அந்தலாரியை வழிமறித்தது.
பின்னர் அந்தக் காரிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், லாரி டிரைவரைக் கத்தி முனையில் மிரட்டி லாரியோடு சேர்த்துஆடைகளைக் கொள்ளையடிக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார், இதைப் பார்த்ததும் கொள்ளையர்களைச்சுற்றி வளைத்துக் கொண்டு கொள்ளையர்களிடமிருந்து லாரி டிரைவரை மீட்டனர்.
இது தொடர்பாக 14 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications