மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர்ந்து வெடிகுண்டு சோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

குஜராத் கோவிலில் தாக்குதல் நடந்ததையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பந்த் காரணமாக இந்தக் கோவிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவிலின் வெளிப்புறத்தில் அடிக்கடி ரோந்து சுற்றியும் வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை அங்குலம் அங்குலமாகப் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுப்பி வைக்கின்றனர்.

கோவிலுக்குள்ளேயும் பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பக்தர்களின் ஒவ்வொரு அசைவையும் செயலையும் போலீசார் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் மூலம் கண்காணித்துவருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவிலைத் தவிர தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவில், மதுரை அருகே உள்ள அழகர்கோவில் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோவில்களில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுச் சோதனையில் மோப்பநாய்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+