போக்குவரத்து கழகங்கள் 7 ஆக குறைக்கப்படுகின்றன: விரைவில் தனியார்மயம்
சென்னை:
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக தமிழகத்திலுள்ள 18 போக்குவரத்துகழகங்களை 7 ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இநதத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
தமிழகத்தில் தற்போது 18 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றை நிர்வாக வசதிக்காகவும், போக்குவரத்துக்கழகங்களுக்கிடையே செலவீனங்களைக் குறைக்கும் விதமாககவும் 7 கழகங்களாகக் குறைக்க அரசு முடிவுசெய்தது.
இதற்கான திட்டவடிவை மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மதுரை, கோவை, சேலம், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களைத்தலைமையிடமாகக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும் இயங்க உள்ளன.
இத் தகவலைத் தெரிவித்த மாநில போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் போக்குவரத்துக் கழகங்களால் தற்போதுஆண்டுக்கு ரூ.2,035 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இனிமேல் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிர்ணயம்செய்யப்படும். போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக உயர் மட்டக் குழு ஆய்வு செய்துவருகிறது என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications