"பிரிட்டிஷ் ராணி விருது" பெற்ற 2 தமிழக போலீஸ் அதிகாரிகள்
சென்னை:
தமிழகத்தின் 2 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இன்று பிரிட்டிஷ் ராணி விருதுகள் வழங்கப்பட்டன.
சி.ஐ.டி. புலனாய்வுத்துறையைச் சேர்ந்த துணைக் கமிஷனர் பிரதீப் பிலிப் மற்றும் விஜிலென்ஸ் பிரிவுஇன்ஸ்பெக்டர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பிரிட்டிஷ் துணைத் தூதரான மைக்கேல்ஹெரிட்ஜிடமிருந்து இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் விருதுகளுடன் தலா ரூ.11,23,800 தொகைக்கான செக்குகளும் வழங்கப்பட்டன.
காவல்துறையின் வளர்ச்சி மற்றும் காவல் பயிற்சித்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அவர்கள்இருவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருது வழங்கும் விழாவில் தமிழக போலீஸ் பயிற்சித் துறைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சி.டிக்கள்,புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
தமிழகப் போலீசாரின் திறமையையும் செயல்பாடுகளையும் ஹெரிட்ஜ் அப்போது வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
ஹெரிட்ஜின் வீட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் தமிழக உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா,டி.ஜி.பி. நெய்ல்வால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications