கோவைக்கும் பரவியது வன்முறை: கடைகள் எரிப்பு, நகரில் பதற்றம்
கோயம்புத்தூர்:
குஜராத் கோவில் தாக்குதலையொட்டி திருப்பூரில் நடந்த வன்முறைகள் இன்று கோவைக்கும் பரவியது.
திருப்பூரில் கடந்த இரு நாட்களாக நடந்த கலவரத்தில் கடைகள் எரிக்கப்பட்டன. பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. வழிபாட்டுத் தலம்எரிக்கப்பட்டது. வீடுகள் தாக்கப்பட்டன. பலருக்குக் கத்திக் குத்து விழுந்தது.
இதனால் அங்கு பெரும் எண்ணிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அங்கு அமைதி நிலவி வருகிறது.
இந் நிலையில் இந்தக் கலவரம் அருகில் உள்ள கோவை நகருக்கு இன்று பரவியது. இன்று அதிகாலை கோவை போத்தனூரை அடுத்தவெள்ளனூரில் அபுபக்கர் என்பவருக்குச் சொந்தமான பேன்சி ஸ்டோர் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அதிகாலை இவரது கடையின் மீது பெட்ரோலை வீசிய கும்பல் அதற்குத் தீ வைத்தது. இதில் அந்தக் கடையும் அருகில் இருந்த 2இந்துக்களின் கடைகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. அபுபக்கரின் கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள்நாசமாயின.
கடையில் தீ எரிவதை அறிந்த அபுபக்கரும் அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த இந்துக்களும் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைக்கஎடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதில் அபுபக்கர் மற்றும் சல இந்துக்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இச் சம்பவத்தால் கோவையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ரிசர்வ் போலீசார் நகரின் பல பகுதிகளிலும் துப்பாக்கிகளுடன் ரோந்து சுற்றிவருகின்றனர்.
கோவையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மதக் கலவரத்தை இன்னும் யாரும் மறந்துவிடவல்லை. இந் நிலையில் இச் சம்பவம்நடந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தைப் பரப்பியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications