பெங்களூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட கர்நாடக விவசாயிகள்: 20 ரயில்கள் ரத்து
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பெங்களூர் ரயில் நிலையத்தில் கர்நாடகவிவசாயிகள் இன்று மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்ப வேண்டிய 20க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சுமார் 1,000 கர்நாடக விவசாயிகள் இன்று காலை திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காகபெங்களூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கு புறப்படுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்த சில ரயில்களின் மீது ஏறி நின்று கொண்டுவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை எதிர்த்தும், தமிழகத்தைத் தாக்கியும் விவசாயிகள் கோஷம் போட்டனர்.
இதையடுத்து பெங்களூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகத்திற்குச் செல்லவேண்டிய ரயில்கள் மட்டுமில்லாமல் இங்கிருந்து வேறு பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்டரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே தமிழகத்திலிருந்து இன்று காலை பெங்களூருக்கு வந்து சேர வேண்டிய ரயில்களும்கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்கள் மூலமேபயணிகள் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு மீது தமிழகம் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைநாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, நீர்வளத்துறை அமைச்சர், அத்துறையின் செயலாளர், கர்நாடகஅரசு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் இதன் நகல்களை அவர்களிடம் சமீபத்தில்நேரடியாகவே வழங்கி மூக்குடைப்பு கொடுத்ததும் நினைவிருக்கலாம்.
இதற்கிடையே நாளை பிற்பகல் காவிரி கண்காணிப்புக் குழுவும் டெல்லியில் கூடவுள்ளது. ஆனால் இந்தக்கூட்டத்தில் தமிழகம் கலந்து கொள்ளாது என்று தெரிகிறது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications