விவசாயிகள் மீது போலீசார் தடியடி: நீடாமங்கலத்தில் பதற்றம்
திருவாரூர்:
காவிரி டெல்டா பகுதிகளில் நேற்றைய முழு அடைப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதுபோலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்ஏற்பட்டது.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிவிவசாயிகள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
இதையடுத்து இந்த மூன்று மாவட்டங்களிலுமே நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் விவசாயிகள்அமர்ந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால்விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்ய போலீசார் முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் போலீசார் விவசாயிகளைக் கலைப்பதற்காகத் தடியடி நடத்தினர். இதில் சுமார் 50 விவசாயிகள்காயமடைந்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென்று போலீசார் மீது கல்வீச்சில்ஈடுபட்டனர். இதில் நான்கு போலீசாரும் ஒரு பஸ் டிரைவரும், ஒரு கண்டக்டரும் காயமடைந்தனர். மேலும் ஒருஅரசு பஸ், தனியார் வேன் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை இருமுறை வீசினர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றும் அவர்கள் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று மேட்டூர் அணையைப் பார்வையிட வரும் காவிரி கண்காணிப்புக் குழுவினர் காவிரிடெல்டா பகுதிகளுக்கும் வந்து ஆய்வு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications