பிரதமர் பதவிக்கே தகுதியற்றவர் வாஜ்பாய்: அதிமுக பாய்ச்சல்
சென்னை:
பிரதமர் வாஜ்பாயும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி ஆகியோர் தங்கள் பதவிக்கு உகந்த வகையில்நடந்து கொள்ளவில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், அதில், முதல்வர் ஜெயலலிதா அந்தப் பதவிக்குஉகந்தவர் அல்ல. பிரதமர் தலைமையில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்த அவர்,பின்னர் அனைத்துக் கட்சியினரையும் கூட்டிக் கொண்டு பிரதமரிடமே வந்து மனு கொடுத்தார்.
அவரது இந்தச் செயல் மூலம் முதல்வர் பதவிக்கே அவர் உகந்தவர் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார்சேத்தி.
சேத்தியின் இந்தப் பேச்சு அதிமுகவை உசுப்பி விட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் பன்னீர் செல்வத்தின் பெயரில் இன்று ஒருஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறி தமிழகத்துக்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் அந்தப் பதவிக்கு உகந்தவர் தானா?
கிருஷ்ணாவின் இந்த அடாவடி செயலை அமைதியாகப் பார்த்து வரும் பிரதமர் வாஜ்பாயும் அமைச்சர் சேத்தியும் அந்தப்பதவிகளுக்கு உகந்தவர்கள் தானா?
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு எதிராகப் பேசிய கர்நாடக முதல்வரை கண்டிக்காமல் அமைதியாகஉட்கார்ந்திருந்தார் பிரதமர் வாஜ்பாய். இதனால் ஜனநாயக முறைப்படி தனது எதிர்ப்பைக் காட்ட அந்தக் கூட்டத்தில் இருந்துவெளியேறினார் முதல்வர் ஜெயலலிதா. இது தவறா?
தனது மாநிலத்தின் கோரிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துக் கொண்டு வந்து பிரதமரிடம் ஒரு மாநிலமுதல்வர் முறையிடுவது எப்படித் தவறாகும். அது சேத்திக்குத் தான் வெளிச்சம்.
கர்நாடகத்தை தட்டிக் கேட்க முடியாத பிரதமர் வாஜ்பாயும், தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்ய முடியாமல் பதவியில்உட்கார்ந்திருக்கும் அர்ஜூன் சரண் சேத்தியும் தான் அந்தப் பதவிகளில் இருக்கத் தகுதியற்றவர்கள்.
இவ்வாறு பன்னீரின் இந்த காட்டாமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக மீது பா.ஜ.க. பாய்ச்சல்:
இந் நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காமல் போனதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை தான்காரணம் என பா.ஜ.க. கூறியுள்ளது.
அக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் சேலத்தில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் மதித்து நடப்பது தான் சரி. ஆனால், மத்திய அரசுடன் ஒத்துப்போக ஜெயலலிதாவால் முடியவில்லை.
இந்த விஷயத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாட்டுக்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் கிடைத்தது.ஆனால், ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தான் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி வழங்க மத்திய அரசு தயாராகஇருந்தது. ஆனால், இது தொடர்பாக விவரங்களைத் தர மாநில அரசு தவறிவிட்டது. இதனால் அந்தத் திட்டமேகைவிடப்பட்டுவிட்டது என்று கூறினார் கணேசன்.












Click it and Unblock the Notifications