21 ம் தேதி திமுக மாநிலம் தழுவிய போராட்டம்
சென்னை:
அதிமுக அரசைக் கண்டித்து 21ம் தேதி தமிழகம் முழுவதிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திகஇளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் சாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் அகம்பாவ போக்கினால் விவசாயிகள் தண்ணீரின்றி வாடிக் கொண்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயேமுதல் முறையாக திமுக ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு இலவச மின்சாரத் திட்டம்இப்போது ரத்து செய்யப்படவுள்ளது என்பதைக் கேள்விப்படும்போது நெஞ்சு கொதிக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது நியாயமானகோரிக்கைகளுக்காக போராட முடியாத நிலை உள்ளது.
இதைக் கண்டித்து வரும் 21ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications