கர்நாடகம் மீது மீண்டும் அவமதிப்பு வழக்கு: ஜெ. முடிவு
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது மற்றொரு அவமதிப்பு வழக்கைத் தொடர தமிழக முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 3ம் தேதி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவை கர்நாடகம் மதிக்காததைத் தொடர்ந்து அதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைநாங்கள் தொடர்ந்தோம். "உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்று கேட்டு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தினமும 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 4ம் தேதிமீண்டும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவையும் மதிக்க கர்நாடக அரசு தவறிவிட்டது. எனவே அந்த அரசுமீது தமிழக அரசு மீண்டும் அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர உள்ளது.
சட்டப்படி நடக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கும், குறுவைசாகுபடி நடக்காததால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கும் அந்த அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியும்வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications