குமரியிலிருந்து டெல்லிக்கு 14ம் தேதி முதல் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்"
சென்னை:
கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்குப் புதிதாக "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" என்ற ரயில் வரும் 14ம் தேதி முதல்இயக்கப்படவுள்ளதாக ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
இதுகுறித்து மூர்த்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆயுத பூஜை தினமான வரும் 14ம் தேதி முதல் திருக்குறள் தொடர் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கத் தொடங்கும்.கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இந்த ரயில் டெல்லி செல்லும்.
மொத்தம் 13 பெட்டிகளைக் கொண்டிருக்கும் இந்த ரயிலில் ரூ.100 செலுத்தி 3 வேளை சாப்பாடு வசதியைப்பெறலாம். இதுதவிர குடிநீர் வசதி, காபி, டீ வசதி உள்ளிட்டவையும் இருக்கும். குழந்தைகளுக்கு தொட்டில்வசதியும் உள்ளது.
ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் திருக்குறள் வாசகங்கள்பொறிக்கப்பட்டிருக்கும். ரயிலில் திருக்குறள் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் தவிர மேலும் 2 புதிய ஜனசதாப்தி ரயில்கள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒருரயில் ஜனவரி முதல் தேதியும், மற்றொரு ரயில் பொங்கல் அன்றும் தொடங்கப்படும்.
மேலும், கோவையிலிருந்து சென்னைக்கு புதிதாக ஒரு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் மூர்த்தி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications