9ம் தேதி தமிழக பந்த்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னை:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடத் தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 9ம் தேதி பந்த் நடத்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில்,
நாளை மறுநாள் (9ம் தேதி) கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒருமுகமாக முடிவு செய்துள்ளோம். இது முதற்கட்ட நடவடிக்கை தான்.
மேலும் நாளை கர்நாடக அரசுக்கு எதிராக இரண்டாவது அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடந்தது. வழக்கம்போல் இந்தக் கூட்டத்தையும் திமுக புறக்கணித்தது. ஆனால், பந்த் நடத்த முடிவு செய்தால் அதை ஆதரிப்போம் என கருணாநிதி காலையில் அறிவித்தார்.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் கர்நாடக அரசு மீறியுள்ளதைத் தொடர்ந்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி தலைமைச் செயலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்துக் கட்சி தமிழக எம்.பிக்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமையுரையாற்றிய ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்பிய பின்னர் 16ம் தேதி பந்த் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால், பந்த்தை தள்ளிப் போட வேண்டாம் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் 9ம் தேதியேநடத்த முடிவு செய்யப்பட்டது.
வழக்கம் போல் திமுக புறக்கணிப்பு:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாது என்று கருணாநிதி இன்று காலை கூறியிருந்தார்.
அதைப் போல மாலை இக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலைநடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் கருணாநதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைமை குறித்து அதிமுக அரசு தரக்குறைவாக பேசியதையும், அறிக்கைகள் விட்டதையும் வாபஸ் பெறக் கோரினோம். ஆனால் இதுவரைவாபஸ் பெறவில்லை. இந் நிலையில் அதிமுக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்வது சரியாக இருக்காது.
மேலும் விவசாயக் குடும்பத்தில் பிறக்காத எனக்கு காவிரிப் பிரச்சனை குறித்து ஒன்றும் தெரியாது என்றுஜெயலலிதா கூறி வருகிறார். அப்படிப்பட்ட நான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் போய் என்ன செய்யப்போகிறேன் என்று வெறுப்புடன் கேட்டார் கருணாநிதி.
நாங்கள் இவ்வாறு புறக்கணிப்பதால் மற்ற எதிர்க் கட்சிகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று கருதத்தேவையில்லை. நாகரீகமான அரசியலைத் தான் எப்போதுமே திமுக நடத்தி வந்து கொண்டிருக்கிறது என்றும்கூறினார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications