திரையுலகினர் போராட்டத்திற்கு ஜெ. முழு ஆதரவு
சென்னை:
காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடும் வரை அந்த மாநிலத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்பதைவலியுறுத்தி வரும் 12ம் தேதி தமிழ் திரையுலகினர் நடத்தவுள்ள பேரணிப் போராட்டம் குறித்து தமிழக முதல்வர்ஜெயலலிதா முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை பாரதிராஜா தலைமையிலான நடிகர்-நடிகையர் குழு ஒன்றுசந்தித்தது. நடிகர்கள் கமலஹாசன், ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், நடிகைகள் குஷ்பூ, மனோரமா மற்றும் இயக்குநர்பாலசந்தர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு பாரதிராஜா பொன்னாடை போர்த்த, அவருக்கு கமலஹாசன் பூச்செண்டு வழங்கினார். பின்னர்ஜெயலலிதாவிடம் பாரதிராஜா போராட்டம் குறித்து விளக்கினார். பின்னர் வெளியே வந்த பாரதிராஜாநிருபர்களிடம் கூறுகையில்,
காவிரிப் பிரச்சினையில் திரையுலகினர் நடத்தவுள்ள போராட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு, எங்களதுதமிழ் உணர்வை மதித்து, தாய்மை உள்ளத்தோடு கேட்டறிந்து, இந்தத் தார்மீக பேரணிக்கும், போராட்டத்திற்கும்தனது முழு ஒத்துழைப்பை கொடுத்து எங்களை அனுப்பியுள்ளது இந்த அரசு.
எனவே திட்டமிட்டபடி நெய்வேலியில் இந்தப் போராட்டம் நடந்தேறும். போராட்டம் குறித்து நாளை விரிவானஅறிக்கை ஒன்றை வெளியிடுவோம்.
இமயமலைக்குப் போய் விட்டதால், போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்வாரா என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும். இருப்பினும் ரஜினி, விஜயகாந்த் போன்றோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
காவிரி விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் யாரையும் நாங்கள் ஆதரிப்போம். முதல்வர் என்ற முறையில்தான் ஜெயலலிதாவைச் சந்தித்தோம். மற்ற கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார்பாரதிராஜா.
நடிகர்கள் சத்யராஜ், பிரபு, தயாரிப்பாளர்கள் காஜா மைதீன், அன்பாலயா பிரபாகரன், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இப்ராகிம் ராவுத்தர் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அமைச்சர்கள் பன்னீர் செல்வம், பொன்னையன், தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், டி.ஜி.பி. நெய்ல்வால்,சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முதல்வரைச் சந்தித்த பிறகு பாரதிராஜா தலைமையில் அனைவரும் நடிகர் சங்கத்திற்கு சென்று அங்கு போராட்டம்குறித்து ஆலோசனை நடத்தினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications