மதுரை, ஊட்டியில் பலத்த மழை
ஊட்டி:
நீலகிரி, பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் ஓரளவு வறட்சி குறைந்துள்ளதாகவிவசாயிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக நல்ல மழைபெய்து வருகிறது. அடை மழையாகப் பெய்வதால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து உயரத்தொடங்கியுள்ளது.
இதேபோல பெரம்பலூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. பெரம்பலூரில் பல இடங்களில்தொலைபேசி வயர்கள் அறுந்து விழுந்ததால் தொலைத் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது.
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டு வந்தமதுரை நகர மக்கள் இந்தத் திடீர் மழையால் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.
இந்தத் தொடர் மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் நல்ல மழை பெய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மழை அப்படியே வடகிழக்குப் பருவமழையாகத் தொடர்ந்து பெய்தால் வறட்சி நிலை நன்றாகத் தணியும்என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications