""தமிழ் உணர்வு இருப்பவன் போராட்டத்திற்கு வருவான்"": பாரதிராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரஜினி வராவிட்டாலும், வேறு யார் வந்தாலும் வராவிட்டாலும் வரும் 12ம் தேதி திட்டமிட்டபடி நெய்வேலியில்திரையுலகினரின் போராட்டம் நடைபெறும் என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா திட்டவட்டமாகஅறிவித்துள்ளார்.

தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவனும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வான் அல்லது அதை ஆதரிப்பான்என்றும் அவர் தெரிவித்தார்.

நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதையடுத்து நிருபர்களைசந்தித்தார் பாரதிராஜா. அவரிடம் ரஜினியின் உண்ணாவிரத ஸ்டண்ட் குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போதுபாரதிராஜா கூறியதாவது:

ரஜினியின் அறிவிப்பு குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல மாட்டேன். நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்தும்செயலாளர் சரத்குமாரும் தான் இதற்குப் பதில் சொல்லணும்.

நெய்வேலியில் நடத்தும் போராட்டம் தமிழ் சமுதாயமே திரண்டு நடத்தும் ஒரு போராட்டம்.

இதில், தமிழ் உணர்வு இருக்கும் ஒவ்வொருவனும் நிச்சயம் கலந்து கொள்வான். எனவே வரும் 12ம் தேதிதிட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று திமுகவைச் சேர்ந்த நடிகர்களிடம் அக்கட்சியின் தலைவர்கருணாநிதி கூறியுள்ளது பற்றி இப்போதைக்கு நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. அது பற்றி பின்னர் பதில்சொல்கிறேன் என்றார் பாரதிராஜா.

கர்நாடகத்தில் மகிழ்ச்சி:

நெய்வேலி போராட்டத்துக்குப் போட்டியாக தனியே உண்ணாவிரதம் இருக்கும் ரஜினியின் அறிவிப்புகர்நாடகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தமிழக திரையுலகினரின் போராட்டத்தை பலவீனப்படுத்த முடியும் என்று கர்நாடக திரையுலகத்தினர்கருதுகின்றனர். மேலும் தமிழ் திரையுலகத்தினர் நடத்தும் போராட்டத்துக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும்இதன்மூலம் குறையும் என அவர்கள் கருதுகின்றனர்.

ரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழ் திரையுலகமே இரண்டாக உடைந்துவிட்டதாக ஆங்கில டிவி சேனல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+