12ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருப்பேன்: ரஜினி அறிவிப்பு
சென்னை:
காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்று கோரி வரும் 12ம் தேதி அல்லது 13ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ரஜினி காந்த் கூறினார்.
நேற்றிரவு ரிஷிகேஷில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி இன்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
நெய்வேலியில் போய் போராட்டம் நடத்தி என்ன ஆகப் போகிறது. கர்நாடகத்துக்கு மின்சாரம் போகாமல் தடுத்துவிட முடியுமா?சென்னேயில் நடத்தி கவர்னரிடம் மனு தரலாமே?
நாம் நடத்தும் போராட்டத்தால் கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது. இதனால் தான் நான்நெய்வேலியில் போராட்டம் நடத்துவதைத் தான் எதிர்த்தேன். கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்றுசொல்லவில்லை. அதை சென்னையில் நடத்தலாம் என்றேன்.
ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
சில பேர் என் மீது உள்ள பொறாமை காரணமாகவும், சில பேர் என் மீதுள்ள பயம் காரணமாகவும் தவறான தகவல்களை பரப்பிவருகின்றனர். விவகாரத்தை திசை திருப்பி வருகின்றனர்.
நெய்வேலி போறவங்க போகட்டும். நான் அமைதியா சென்னையில வள்ளுவர் கோட்டத்தில் அல்லது பிலிம் சேம்பரில் அல்லதுநடிகர் சங்கத்தில் உண்ணாவிரதம் இருப்பேன். அங்கே போறவஙக போகலாம். என் கூட உண்ணாவிரதம் இருக்குறவங்கஇருக்கலாம்.
நான் சொன்னதை திமுக தலைவர் கருணாநிதி சரியாகப் புரிந்து கொண்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். விஜய்காந்த் எல்லாதரப்பினர்கிட்டயும் பேசிக்கிட்டு இருக்கார். என்கிட்டயும் பேசினார்.
எனக்கு எதிரா தவறான தகவல்களை பரப்பிகிட்டு இருக்கிறவங்க யாரு? அவங்களை தூண்டுற அரசியல்வாதிகள் யாருன்னுஎனக்குத் தெரியும்.
அவங்களை தேர்தல் நேரத்துல நான் பாத்துக்கிறேன்.
நான் முதல்ல இந்தியன் அப்புறம் தான் தமிழன் என்றார்.
ரிஷிகேஷ் போய் வந்ததாலோ என்னவோ காவி உடையில் டிரஸ் போட்டுக் கொண்டு மிக ஆவேசமாப் பேட்டி தந்தார் ரஜினி.
அரசியலுக்கு வரத் திட்டம்?
இதன் மூலம் அவர் அதிமுகவைத் தான் நேரடியாகத் தாக்குவதாகத் தெரிகிறது. பாரதிராஜாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவின்ஆதரவு இருப்பதைத் தான் இவர் மறைமுகமாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிடுகிறார்.
இதன்மூலம் ஜெயலலிதாவுடன் மீண்டும் ஒரு மோதலுக்கு ரஜினி தயாராவதாகத் தெரிகிறது. அவர் தீவிர அரசியலுக்கு வரவும்திட்டமிடுவதாகவே அவரது பேச்சு காட்டுகிறது.
சமீபத்தில் தான் பாபா பட ரிலீசின் போது பா.ம.கவுக்கும் ரஜினிக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ராமதாஸ் கட்சியினருடன்மோதலை தவிர்த்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் ரஜினி.
இப்போது ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுள்ளார். 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக இறங்கி திமுகவை ஆட்சிக்குக்கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார் ரஜினி. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் ரஜினியின்பேச்சை தமிழ்நாட்டில் யாரும் காதில் வாங்கவில்லை.
அப்போது ரஜினியின் ஆதரவு இருந்தும் திமுக மண்ணைக் கவ்வியது. ஜெயலலிதா தான் வென்றார். இதன் பிறகு தமிழகஅரசியலில் தலையை நீட்டாமல் இருந்து வந்த ரஜினி இப்போது தேர்தல் வரட்டும் என்று சவால் விடுகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications