பந்த் காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
தமிழகத்தில் நடைபெறும் பந்த்தையொட்டி இன்று நடைபெறவிருந்த பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. ஆகியவற்றுக்கான வழக்கான மறு தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று பந்த் நடைபெறுவதைத்தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மட்டும் வேறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று காலை நடைபெறவிருந்த பிளஸ் டூ பொருளியல் தேர்வுகள் வரும் 19ம் தேதி காலை நடைபெறும்.
அதேபோல் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த சமூகவியல், ஆயுர்வேதத் தேர்வுகளும் 19ம் தேதி பிற்பகல்நடைபெறும்.
இன்று நடைபெறுவதாக இருந்த ஓ.எஸ்.எல்.சி. முதல் மொழித்தாள்-1 சமஸ்கிருதம், அரபு, பெர்சியன் மற்றும்மெட்ரிக் மொழித்தாள்-2 ஆகிய தேர்வுகள் வரும் 12ம் தேதி காலை நடைபெறவுள்ளன.
அதேபோல் ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆங்கிலம் 2ம் தாள் தேர்வும் வரும் 12ம் தேதி நடைபெறும் என்றுபழனிவேலு அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி, பார்மஸி கவுன்சிலிங் ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், பி.பி.டி. மற்றும் பார்மஸி கல்லூரிகளிலும் மாணவர்சேர்க்கைக்காக இன்று நடைபெறவிருந்த கவுன்சலிங்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்சி கவுன்சலிங் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என்று ஆசிரியர்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதே போல் பி.பி.டி. மற்றும் பார்மஸி பட்டப் படிப்புகளுக்காக இன்று நடைபெறவிருந்த கவுன்சலிங் வரும் 11ம்தேதி காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகளும்...
இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் 19ம் தேதிக்கும், 19ம் தேதி நடைபெறவிருந்ததேர்வுகள் 25ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல் சில பல்கலைக்கழங்களில் இன்று நடைபெறவிருந்த "அரியர்ஸ்" தேர்வுகளின் தேதிகளும்மாற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications