மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற தி.க. கோரிக்கை
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சமீபத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ.50,000 வரை அபராதம்விதிக்கவும் இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.
இந்தச் சட்டத்தை பா.ஜ.க., வி.எச்.பி. உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்புகளும், காஞ்சி சங்கராச்சாரியாரானஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் சிறுபான்மை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் தடைச் சட்டத்தைக்கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதை வாபஸ் பெற வேண்ம் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தமிழகத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள்மற்றும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றை மூடிவிடுவோம் என்றும் கிறிஸ்தவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திராவிடர்கழகமும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வீரமணி இன்று சென்னையில வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
ஒருவருடைய மதமாற்றத்திற்கான காரணத்தை அறிந்து அதை நிவர்த்தி செய்யத் தான் தமிழக அரசு முன்வரவேண்டும்.
இதனால் கிறிஸ்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவ சேவைஅமைப்புகள் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு பொறியாகக் கிளம்பும் போதே அதை அணைப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.
பெருந்தீயாக வளர விட்டால் அது தமிழக ஆட்சிக்கே கேடாக அமைந்து விடும் என்று அவ்வறிக்கையில் வீரமணிகூறியுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications