பாகிஸ்தான் தேர்தல்: மத பழமைவாதிகள் கூட்டணி வெற்றி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திலும் மாநில சட்ட சபைகளிலும் மதத் தீவிரவாதிகள்- பழமைவாதிகள்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இக் கூட்டணி நாட்டின் 4 மாநிலங்ளில் 2ல் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இன்னொன்றில் கூட்டணி அரசில் பங்கேற்க உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களைப் பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவுடன் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூட்டணி சேர்ந்ததை எதிர்த்துஇந்த பழமைவாதக் கூட்டணி உருவானது.
மேலும் நாட்டில் பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்க நெருக்குதலால் முஷாரப் ஒடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்.
இதனால் முத்தாஹிதா மஜ்லீஸ்- ஏ- அமல் என்ற பெயரில் 6 பழமைவாதக் கட்சிகள் சேர்ந்து இந்தக் கூட்டணியை உருவாக்கின.தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தக் கூட்டணியின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும்தான் பிரச்சாரம் செய்தனர்.
இவர்களுக்கு மதப் பள்ளிகளின் ஆதரவும் கிடைத்தது. இப்போது தேர்தல் முடிவுகளும் சாதகமாக வெளி வர ஆரம்பித்துள்ளன.இவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி பாகிஸ்தான் மக்களிடையே அமெரிக்காவுக்கு நிலவி வரும் எதிர்ப்பு உணர்வைவெளிப்படுத்தியுள்ளது.
அடுத்து இந்தக் கூட்டணியே ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு பெருகும்மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தான் இவ்வாறு அமைந்துள்ளன. முழுமையான முடிவுகள் நாளை தான் தெரியவரும்.
-
நடுவானில் மோதிய விமானம்! அலறி துடித்த இளம்பெண்! அடுத்த செகண்ட் அந்த அதிசயம்! திக்திக் வீடியோ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications